போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்!

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. 

புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வௌியிடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே இந்த விடயத்தை கூறினார்.
Powered by Blogger.