சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இதுரை தீர்மானம் எடுக்கவில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஜே.வி.பி கருத்து வெளியிட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்ட பின்னர் அதில் உள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னரே ஆதரவளிப்பதா? எதிர்ப்பதா என்பது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர், அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இரா. சம்பந்தன் தொடர்பில் தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது  தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இதுவரை இறுதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை.
Powered by Blogger.