போலி நாணயத்தாளுடன் மூன்று பேர் கைது!

போலி நாணயத் தாளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் தர்மபுரம், புதுன்காடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தர்மபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி மேறடகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 500 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றும் மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

வவுனியா, இராமநாதபுரம் மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
Powered by Blogger.