பொகவந்தலாவையில் சுற்றுலாத் தளங்களை அமைப்பது குறித்து ரணில் ஆராய்வு!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவையில் சுற்றுலாத் தளங்களை அமைப்பது குறித்து பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு இன்று நேரில் ஆராய்ந்தது.

அவருடன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற கே.கே.பியதாஸ, ஹற்றன் டிக்கோயா நகர சபையின் பிரதி தலைவர் ஏ.எம்.பாமிஸ் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் ‘குழிப்பந்தாட்டம்’ கோல்ப் மைதானம் அமைத்தல், உல்லாச விடுதிகளையும் அமைத்தல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது குறித்து பிரதமர்  தலைமையிலான குழு நேரில் ஆராய்ந்தது.

Powered by Blogger.