இரணைமடுக் குளத்து நீரை விவ­சா­யி­கள் கவ­ன­மா­கப் பயன்­ப­டுத்தவும்!

கிளி­நொச்சி இர­ணை­ம­டுக் குளத்­தில் இருந்த நீரில் மூன்­றில் ஒரு பங்கு நீர் விதைப்­பின்­போதே பயன்­ப­டுத்­தப்­பட்டு விட்ட நிலை­யில் விவ­சா­யி­கள் நீரைக் கவ­ன­மா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என இர­ணை­மடு விவ­சா­யி­கள் சம்­மே­ள­னச் செய­லா­ளர் மு.சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

2018ஆம் ஆண்­டின் சிறு­போ­கத்­தில் இர­ணை­ம­டுக் குளத்­தின் கீழ் ஆயி­ரத்து 812 ஏக்­கர் செய்கை மேற்­கொள்­ளத் தீர்மா­னித்து அதற்­கான விதைப்­பு­க­ ளும் தற்­போது நிறை­வ­டைந்­துள்­ளன. இந்த நிலை­யில் குறித்த விதைப்பு ஆரம்­பிப்­ப­தற்பு முன்பு குளத்­தில் 16.2 அடி நீர் காணப்­பட்­டது.
இருப்­பி­னும் விதைப்பு மட்­டுமே முடி­வ­டைந்த நிலை­ யில் தற்­போது 14.2 அடி நீரே குளத்­தில் உள்­ளது. அதா­வது தற்­போது உள்ள நீரா­னது ஆரம்­பத்­தில் காணப்­பட்ட நீரின் 2/3 பங்கு மட்­டுமே கையி­ருப்­பில் உள்­ளது.
நெல் அறு­வ­டையை நெருங்க சுமார் 3 மாத­கா­லம் எட்­ட­வேண்­டிய தேவை­யுள்­ளது. இத­னால் அனைத்து விவ­சா­யி­க­ளும் தமது நீர்ப்­பாச்­ச­லின் போது வீண் விர­யத்­தைத் தடுப்­பது மிக அவ­சி­யம்.
யாரா­வது ஓரு சில விவ­சா­யி­கள் மத்­தி­யில் கவ­னக் குறைவு ஏற்­பட்­டா­லும் ஒட்டு மொத்த விவ­சா­யத்­தின் இறு­திப் பாச்­ச­லுக்­கும் நீர் இன்மை ஏற்­ப­டும். அதன் பின்பு நாம் அதி­கா­ரி­களை மட்­டும் குறை கூறாது எமது பொறுப்பை உணர்ந்து செயல்­ப­டு­வ­தன் மூலமே அதி­கா­ரி­க­ளை­யும் கேள்வி கேட்க முடி­யும். இதை எண்ணி மிக­வும் சிக்­க­னத்­தை­யும் கவ­னத்­தை­யும் பேண வேண்­டும் என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.