பூந­க­ரிப் பிர­தே­சத்­தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை!

கிளி­நொச்சி பூந­க­ரிப் பிர­தே­சத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­க­ளின் பற்­றாக்­குறை தொடர்ந்­தும் நில­வு­கின்­றது . எனவே அந்­தக் குறை நிவர்தி செய்­யப்­ப­ட­வேண்­டும் என்று பெற்­றோர்­கள் தரப்­பில் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.
கிளி­நொச்சி பூந­க­ரிப் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் பிர­தேச செய­லக மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெற்­றது. இதன்­போதே பெற்­றோர்­கள் இவ்­வாறு கோரிக்கை விடுத்­த­னர்.
பெற்­றோர்­க­ளு­டைய கோரிக்­கையை ஏற்­றுக் கொண்ட கிளி­நொச்சி பிரதி வலய கல்­விப்­ப­ணிப்­பா­ளர் கருத்­துத் தெரி­விக்­கும் போது: குறித்த பிரச்­சினை தொடர்ந்­தும் நிலவி வரு­கி­றது. ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லும், 7 ஆண்­டுப் பூர்த்­தி­யி­லும் வருகை தந்த ஆசி­ரி­யர்­கள் தற்­போது அவர்­க­ ளின் காலம் முடி­வ­டைந்து வெளி­யே­றிச் செல்­கின்­ற­னர்.
அத­னைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. ஏனெ­னில் அவ்­வாறு நாம் கண்­டிப்­பாக மறித்­தால் அவர்­க­ளின் மனித உரிமை மீறும் செய­லா­கி­வி­டும் இருப்­பி­னும் வேறு இடங்­க­ளில் இருந்து வருகை தரும் ஆசி­ரி­யர்­க­ளை பற்­றாக்­குறை நில­வும் பகு­தி­க­ளுக்கு அனுப்­பு­வ­தா­கத் தீர்­மா­னிக்­கப் பட்­டுள்­ளது. அத்­தோடு உள்­ளக மாற்­றங்­க­ளுக்கு ஆளா­கும் ஆசி­ரி­யர்­கள் இவ்­வாறு குறிப்­பி­டப்­ப­டும் பாட­சா­லை­க­ளுக்கு தற்­போது நிய­மிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர் என்­றார்.
Powered by Blogger.