டொமினிக்கா இராஜதந்திர தொடர்புகளை மேற்கொள்ள இலங்கை தீர்மானம்!

இலங்கை அரசாங்கம் பொதுநலவாய அமைப்பிற்கு உட்பட்ட நாடான டொமினிக்காவுடன் இராஜதந்திர தொடர்புகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான தூதுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியுமான டொக்டர் அமிரித் றொகான் பொரேரா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் டொமினிக்காவின் நிரந்தர பிரதிநிதியும் இது தொடர்பிலான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்றது.
Powered by Blogger.