இந்தியா சென்று வந்தபின்னர் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது!
அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை அரசு எடுக்கத் தவறினால் அரச நிர்வாக முடக்கப் போராட்டம் நடக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பது மக்களுக்கு “கப்சா” விடும் செயலே. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இழந்த வாக்கு வங்கியை நிரப்பும் உத்தியே தவிர வேறு ஒன்றுமில்லை.
இவ்வாறு கூறியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசியல் தீர்வுக்கான காத்திரமான முயற்சிகளை அரசு எடுக்காதுவிட்டால் வடக்கு, கிழக்கு எங்கும் அரச நிர்வாக முடக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
கூட்டு அரசு அமைக்கும்போது எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளாது – நிபந்தனை இன்றி ஆதரவு வழங்கிவிட்டு, ஆட்சிக்காலம் 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நிர்வாக முடக்கப் போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது தமிழ் மக்களுக்கு “கப்சா” விடும் செயலே. அதில் எந்தப் பயனும் இல்லை.
கடந்த அரச தலைவர் தேர்தலின்போது நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடினோம். தென்னிலங்கை தரப்புகள் நிறைவேற்ற வேண்டிய விடயங்களைக் குறிப்பிட்டு அவர்களுடனான எழுத்துமூலமான ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை சம்பந்தன் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இந்தியா சென்று வந்தபின்னர் நிபந்தனை இன்றி ஆதரவு வழங்கப்படும் என்று திடீரென அறிவித்தார். இனப்பிரச்சினை மட்டுமல்லாது பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை என்பவற்றுக்கான தீர்வுகள் கிடைக்க வேண்டியுள்ளது. வெளிக்காட்சிகளுக்காக சில நூறு ஏக்கர் நிலங்களே விடுவிக்கப்படுகின்றன. அவற்றுக்கும் எமது மக்களின் அயராத போராட்டமே காரணம்.
நாம் சில உத்திகளைக் கையாண்டிருக்கலாம். பிரச்சினைகள் வரும்போது மட்டுமே அரசுடன் பேசுகின்றனர். அதைவிட்டு அரசும், தமிழ்க் கூட்டமைப்பும் முதலில் பேச்சு நடத்தவேண்டும். அரசு எவற்றைச் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூற வுண்டும். அரசின் நிலைப்பாட்டை வைத்து தீர்வு விடயத்தில் அரசு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அறிந்து செயற்பட்டு இருக்க வேண்டும்.
அதை விடுத்து இப்போது போராட்டம் வெடிக்கும் என்று கூக்குரல் இடுவது இழந்த வாக்குகளை மீளப் பெறுவதற்கான முயற்சியே தவிர, தீர்வு விடயத்தில் எந்தப் பயனையும் தராது.- என்றார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை