வடிவேலுவுக்கு கிடைத்த டபுள் சந்தோஷம்.!
தமிழ் சினிமாவில் ஈடு இணை இல்லாத காமெடி நடிகர்களில் ஒருவர்
நடிகர் வடிவேலு. இவருடைய காமெடி காட்சியை பார்த்து சிரிக்காத மனிதர்களே இருக்க முடியாது என்று கூறலாம். உடலால் மட்டும் இன்றி தன்னுடைய ஒவ்வொரு அசைவுகள் மூலமும் கூட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைப்பார்.
இவர் காமெடியனாக மட்டும் இன்றி, ஹீரோவாகவும் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக ஒரு சில பிரச்சனைகளால், இவர் திரைத்துறையில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு மீண்டும் 'கத்தி சண்டை' மற்றும் 'சிவலிங்கா' ஆகிய படங்களில் காமெடியனாக ரீஎன்ட்ரி கொடுத்த இவர் விட்ட இடத்தை பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றிப்பெறவில்லை.
மேலும் இவர் ஹீரோவாக நடிக்க இருந்த '24ஆம் புலிகேசி' படத்திலும் சில பிரச்சனைகள் இருந்ததால் மனஉளைச்சலில் இருந்தார். தற்போது இவருடைய கவலையை மறக்கடிக்கும் அளவிற்கு இவர் குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.
சமீபத்தில் திருமணமான அவரது மகளுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாம். அதுவும் இரட்டை குழந்தைகளாம்... ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை என்பதால் வடிவேலு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை