கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு அமைவாக அனைத்து செயலாளர்களையும் மாற்றுமாறு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய வரை சுகாதார அமைச்சின் செயலாளராகவும்,சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவரை விவசாய திணைக்களத்தின் செயலாளராகவும், பிரதம செயலாளரை ஆளுநர் செயலாளராகவும். ஆளுநர் செயலாளரை பிரதம செயலாளராக இடமாற்றம் செய்யவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
Powered by Blogger.