காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆளணிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆளணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

 இந்த மாதம் முதலாம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகம், தற்காலிக கட்டிடம் ஒன்றில் இயங்க ஆரம்பித்துள்ளது.

 இந்த அலுவலகத்துக்கும், ஏனைய மாவட்ட ரீதியான அலுவலகங்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் மற்றும் மீளிடம்பெறாமை உறுதிசெய்யப்பட வேண்டும் என்று நம்புகின்றவர்களை விண்ணப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
Powered by Blogger.