எரிபொருளுக்கு விலைச்சூத்திம் தொடர்பாக ஆராய்வு!

எரிபொருள் தொடர்பில் அரசாங்கம் விலைச் சூத்திரமொன்றையோ வரிச்சலுகை யொன்றையோ அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்தது. இதனால் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேள்வி அதிகரித்துள்ளதோடு நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முகங்கொடுப்பதற்காக எரிபொருளுக்கென விலைச் சூத்திரமோ வரிச்சலுகையோ வழங்குமாறு பெற்றோலிய வள அமைச்சு ,நிதி அமைச்சை கோரியுள்ளது.இது தொடர்பில் நிதி அமைச்சு தரப்பில் எது வித பதிலும் கிடைக்கவில்லை என பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க கூறியுள்ளார்.
ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை 9 ரூபாவினாலும் டீசல் விலையை 5 ரூபாவினாலும் அதிகரித்திருந்தது.பெற்றோலிய கூட்டுத்தாபன ம் விலைகளை அதிகரிக்காமல் அதே அளவில் முன்னெடுத்து வருகிறது.
குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுவதால் கூடுதலான வாடிக்கையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களையே நாடிவருவதாக அறியவருகிறது. 
Powered by Blogger.