சேர வேண்டியவர்களுடன் சேருவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. காவிரி பிரச்னையில் நூற்றாண்டுகளாக தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். 
காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால், தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும். அரசியல் சூழ்ச்சி வேண்டாம், நேர் கொள்வோம், எதிர்கொள்வோம். காவிரி பிரச்சனையில் தீர்வை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது. 
இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் என்பது எனது கனவு. எங்களுக்கு உண்ணாவிரத்தத்தில் நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் நம்பிக்கையுள்ளது. மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசு, நீருக்காக கெஞ்ச வைத்து விட்டார்கள். 
உறங்குபவர்களை தட்டி எழுப்பிவிடலாம், உறங்குவது போல் நடிப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. நாங்கள் செயல்பட தொடங்கும்போது மக்கள் ஏமாற மாட்டார்கள். சேர வேண்டிய நேரத்தில் சேர வேண்டியவர்களுடன் சேருவோம்’ என்றார். 
Powered by Blogger.