சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கைது!

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் இன்று (06) வௌிநாடு செல்வதற்கு முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
Powered by Blogger.