வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர்!

யாழ் மாநகர மேயர் ஆனோல்ட்  ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சற்று முன்னர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது.
யாழ் மாநகரத்தை, அழகு படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பில் இதன்போது  கலந்துரையாடப்பட்டது.
மாநகரக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் நடுவண்  அரசின் உதவியைப் பெற்றுக்கொடுக்க  தான் தயாராக இருப்பதாகவும் தேவை ஏற்படின் கோரிக்கையினை முன்வைக்குமாறும் மாநகர மேயர் ஆனோல்டை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
Powered by Blogger.