மாத்தறை கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் கண்டுபிடிப்பு!

மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் ஒட்டிப் பிறந்த கடலாமைகள் இரண்டு கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடல் ஆமைகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கடலாமைகளை மிரிஸ்ஸ கடல் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கும் கடலாமைகள் பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டு கடலாமைகளும் சிறப்பான உடல் நிலையில் உள்ளதாக மிரிஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்கு வரலாற்றில் இதுவரை ஒட்டிப் பிறந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
Powered by Blogger.