பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷா மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. 
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நேற்று முன்தினம் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்தார்.

ஏதிர்க்கட்சி தலைவரின் இல்லத்திற்கு சென்ற அமைச்சரை மகிழ்ச்சியுடன் வரவேற்று நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இதன்போது, இருதரப்பு உறவுகள் குறித்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாகிஸ்தான் நாட்டு மக்களின் வாழ்வாதாரம், சனத்தொகை மற்றும் விவசாயம் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.
Powered by Blogger.