பிரபல பாதாள உலகக் குழு தலைவரின் மனைவி கைது!

பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 கம்பஹா காவல்துறை அதிகாரிகள் நேற்று அவரின் இல்லத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, அவரின் இல்லத்திலிருந்து 9மில்லி மீற்றர் ரக கைக்குண்டுகள் 46 மற்றும் கைத்துப்பாக்கி உற்பத்தி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஆங்கில மொழி புத்தகம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், காவல்துறை பாதுகாப்பில் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

 பாதாள உலகக் குழு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள ஒஸ்மன் குணசேகர தற்போது வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.