கொழும்பிலிருந்து கொல்கத்தாவுக்கு மேலும் ஒரு விமான சேவை!

ஸ்ரீ லங்கன் விமான சேவை, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பிலிருந்து கொல்கத்தாவுக்கு மற்றுமொரு விமானத்தை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தச் விமான சேவையானது வாரத்தில் நான்கு தடவைகள் இடம்பெறும் என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

 அத்துடன், சுற்றுலாத் துறையினருக்காக மூன்று இரவு மற்றும் நான்கு பகல் என்ற பயணப் பொதியொன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.