பல்கலை மாணவர் நீரில் மூழ்கி பலி!

கினிகத்தேனையடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

 இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சிலருடன் நேற்று காலை களனி கங்கையில் படகு சவாரி சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 சடலம் தலிகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

 விபத்து தொடர்பில் கினிகத்தேனை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.  இதேவேளை, குறித்த இடத்தில் கடந்த 17 ஆம் திகதி நடிகை துஷானித சில்வா நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது . 


Powered by Blogger.