பிரதேச சபையின் கன்னி அமர்வில் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து வருகை!
மஸ்கெலியா பிரதேச சபையின் கன்னி அமர்வு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் சென்பகவள்ளி தலைமையில் இன்று (12) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
இந்த கன்னி அமர்வின் போது, உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகிய சபை அமர்வில் கடந்த 28 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவின் போது தலைமை தாங்கிய உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் சட்டத்திற்கு முரனாக நடந்து கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெரிவாகிய 7 உறுப்பினர்கள் இவ்வாறு கருப்பு பட்டியணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்
சபையமர்வின் போது கடந்த 28 ஆம் திகதி தலைவர் தெரிவிற்கு வருகைத்தராத ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரஞ்சனி இன்று இடம்பெற்ற சபை அமர்வில் கலந்துகொண்டு உரையற்றும் போது அமளிதுமளி ஏற்பட்டதுடன் மதியம் 1 மணியளவில் சபை நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை