முஸ்லிம் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இன்று (04) இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்க தீர்மானித்துள்ளது. என  கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.


முஸ்லிம் மக்களின் எதிர்காலம், நாட்டின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, கட்சியின் உயர் பீட கூட்டத்தில் ஆராய்ந்து குறித்த முடிவை ஏகமனதாக எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி எனும் வகையில், தற்போது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒன்றாகவே பார்க்கின்றோம் என்றார்.
அதற்கமைய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடையச் செய்வது என, உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐ.தே.க.வுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமைச்சர் ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 05 எம்.பிக்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.