மட்டக்களப்பில் துப்பாக்கியுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் காட்டுப்பகுதியில் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று (08) காலை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். 

பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது சட்டவிரோதமான முறையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்ததுடன் துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 
Powered by Blogger.