சுதந்திர கட்சி அமைச்சர்களின் அதிரடி தீர்மானம்!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.அதேபோல் , அவர்கள் அமைச்சுப்பதவியில் இருந்து விலகவும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை , தயாசிறி ஜயசேகர , டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி , அனுராத ஜயரத்ன , சுதர்ஷனி பிரனாந்து பிள்ளை மற்றும ்சுசந்த புஞ்சி நிலமே ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? கட்சிகளின் தீர்மானங்கள் இதோ
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்டபோதே அவர்கள் தமது முடிவுகளை அறிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அவர் தமது தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் இருவேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதென அறிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானதென தெரிவித்தார்.
அமைச்சர் அமரவீரவுடனான சந்திப்பில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கே தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எவ்வாறு வாக்களிக்க உள்ளது என்பது தொடர்பில் எமது செய்தி சேவை கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிடம் வினவியது.
இந்த விடயம் தொடர்பில் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இது குறித்து கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அதேநேரம் பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றிரவு கூடிய மனோகனேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 உறுப்பினர்களும் அவநம்பிக்கை பிரேரணையை எதிர்ப்பதற்கு தீர்மானித்தனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை மக்கள் காங்கிரஸும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.
ஜே.வி.பி இந்த பிரேரணையை ஆதரிக்க உள்ளமையை, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் அவநம்பிக்கை பிரேரணை விடயத்தில் இறுதி முடிவுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.