மதுரையில் தமிழ் அமைப்புகள் கறுப்புக் கொடியுடன் மறியல்! கைது!
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்று வலியுறுத்தி மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் முன்பு இன்று ( 12.4.18) காலை 11 மணிக்கு கறுப்புக் கொடியோடு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தைப்புரட்சி இயக்கம், மே 17 இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம், நாணல் நண்பர்கள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அனைவரும் மோடி படத்திற்கு செருப்படி தந்து மோடியே திரும்பிப் போ என்று முழக்கமிட்டனர்.
அனைவரும் கைது செய்யப்பட்டு மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை