கவர்மெண்டுக்கு காசு, எங்களுக்கு கேன்சரா?

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களின் உடல்நலம் பாதிப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். சரத்குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆரி உள்பட பல நடிகர்கள் நேரிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சதீஷ் இதுகுறித்து தனது டுவிட்டரில் ஆவேச கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?” என்று சதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார். சதீஷின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.