வடக்கு மாகாண முதலமைச்சராக சர்வேஸ்வரன் இன்று பதவியேற்கவுள்ளார்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப்பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளதை அடுத்து, பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் இன்று   பதவியேற்கவுள்ளார்.
பத்தரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளார்.
இவர் இருவாரங்கள் பதில் முதலமைச்சராகக் கடமையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
Powered by Blogger.