கேக் நிலை­யம் என்ற போர்வையில் போதைப் பாக்கு விற்­பனை நிலை­யம்!

யாழ்ப்­பா­ணம், ஐந்து சந்­திப் பகு­தி­யில் கேக் நிலை­யம் என்ற போர்­வை­யில் இயங்­கிய போதைப் (மாவா) பாக்கு விற்­பனை நிலை­யம் நேற்று முற்­று­கை­யி­டப்பட்­டது.
சந்­தே­க­ந­பர்­கள் 6 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அதன் உரி­மை­யா­ளர் புத்­த­ளத்­தைச் சேர்ந்­த­வர் என்­றும், கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் 3 பேர் போதைப் பாக்­குக் கொள்­வ­னவு செய்ய வந்­த­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
விற்­பனை நிலை­யத்­தில் இருந்து 50 பாக்­குப் பொதி­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. பாட­சாலை மாண­வர்­களை இலக்கு வைத்தே இந்த விற்­பனை நிலை­யம் இயங்கி வந்­தது என்று விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.
இந்த விற்­பனை நிலை­யம் நீண்­ட­கா­ல­மாக இயங்கி வரு­கின்­றது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. விற்­பனை நிலை­யம் நடத்­தி­ய­வர்­கள் பல­முறை கைது செய்­யப்­பட்­டுப் பின்­னர் விடு­விக்­கப்­பட்­ட­னர் என்று பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­கள் கூறு­கின்­ற­னர்.
இந்­த­நி­லை­யில் வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ரொசான் பெர்­னான்­டோ­வின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய காங்­கே­சன்­துறை தரம் 2 பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் டி.கே.பிரி­யந்த தலை­மை­யி­லான குழு இந்­தச் சுற்­றி­வ­ளைப்பை மேற்­கொண்­டது.
இந்­தச் சிறப்­புப் பொலிஸ் குழு போதைப் பொருள் நட­வ­டிக்­கை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் சிறப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இயங்­கு­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.
கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் தொடர் விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்று பொலி­ஸார் தெரி­வித்­தார்.
Powered by Blogger.