ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள நான் ரெடி.!

நடிகர் ஆர்யா மிகவும் தீவிரமாக திருமணம் செய்துகொள்ள பெண் தேடி வருவதாக கூறி ஒரு நிகழ்ச்சியின் மூலம் 16 பெண்களை தேர்வு செய்தார். இந்த 16 பெண்களுக்குள்ளும் யார் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள போவது என பல போட்டிகள் நடத்தப்பட்டது.
இறுதியில் மூன்று பெண்களை தேர்வு செய்த ஆர்யா. இவர்களில் ஒருவரை கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீடீர் என இதில் ஒருவரை தேர்வு செய்தால் மற்ற இரண்டு பெண்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று கூறி மூன்று பெண்களையும் திருமணம் செய்துக்கொள்ளாமல் நிராகரித்தார்.
விமர்சனத்திற்கு ஆளான ஆர்யா:
இந்நிலையில், ஆர்யாவின் முடிவால் மிகவும் அதிருப்தியடைந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இவரை தொடந்து விமர்சித்து வந்தனர். ஆர்யா 16 பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி உள்ளதாகவும், 3 பெண்களை திருமண மேடை வரை அழைத்து வந்து, ஏமாற்றி விட்டதாக கடுமையான வார்த்தைகளால் தாக்கினர்.
ஆர்யாவை திருமணம் செய்ய நான் ரெடி:
இந்நிலையில் நேற்று நவரச நாயகன் கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யாவும் கலந்துகொண்டார்.
இதே நிகழ்ச்சியில், ஆர்யாவின் தோழி நடிகை வரலட்சுமியும் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய நடிகை வரலட்சுமி "ஆர்யாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன்" என்று மேடையிலேயே காமெடியாக கூறினார்.
"ஆனால் அவர் உன்னை ரிஜெக்ட் செய்துவிடுவார்" என அங்கிருந்தவர்கள் வரலட்சுமியை கலாய்த்துவிட்டனர். மேலும் இந்த படத்தில் வரலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.