செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக்கட்சி கைப்பற்றியது!

செட்டிக்குளம் பிரதேச சபையை சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது.
சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஆ.அந்தோனி 7 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் 6 வாக்குகளைப் பெற்றார்.
சபையின் உபதவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் தெரிவானார். அவருக்கு ஏழு வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட த.தே.கூவின் வேட்பாளருக்கு 6 வாக்குகள் கிடைத்தன.
முன்னதாக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திரக்கட்சி ஆகியன வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார்கள். முதல் சுற்றில் தமிழர் விடுதலைக்கூட்டணி தோல்வியடைந்தது.
இதன்பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியும், அகில இலங்கை தமிழ்
காங்கிரசும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.