இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் திறப்பு!

இராணுவத்தினரால் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் கொழும்பு – 3இல் அமைந்துள்ள பழைய டச்சு கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘அமைதி மாளிகை’ (Sama Medura) என்ற பெயரில், இந்தப் பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு அமைதிகாப்பு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை கடப்பாடுகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை இந்தப் பணியகம் மேற்கொள்ளவுள்ளது.
பணியகத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில், அமைதிகாப்பு படைக்கான படைப்பிரிவுகளை அனுப்புதல், அவர்களுக்கான பயிற்சிகள், செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்த பணியகமே மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.