அடுத்த மாதம் 03ம் திகதி தபால் தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்!

ஜூன் மாதம் 03ம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகமவின் தலையீட்டால் கைவிடப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும் அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் பொது செயலாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.
Powered by Blogger.