மூணாரில் மலர்ந்தது குறிஞ்சி மலர்!

மூணாரின் புகழ்பெற்ற ராஜமலைத் தொடரில் குறிஞ்சிப் பூக்கள்
பூத்துள்ளன.

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது . கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதியில் 3 ஆறுகள் ஒரே இடத்தில் இணைகின்றன.

மூணாரின் ராஜமலைத் தொடரில்தான் 2,695 மீட்டர் உயரம் கொண்ட ஆனைமுடி சிகரம் உள்ளது. ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் சுற்றுலாப் பயணிகளைக் ஈர்க்கும் அம்சமாக உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டில் தற்போது மூணாரில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. அவற்றைப் பார்ப்பதற்காக மூணாரில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குறிஞ்சிப் பூ பூப்பதை வைத்துத்தான் அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் தங்கள் வயதைக் கணக்கிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.