பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

'இணக்கப்பாட்டின் மூலம் தொழில்முறை உயர்தன்மையை பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் இம்முறை வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.

குறித்த இந்நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடவியலாளர் மாநாடு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இவ்வருட சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப உரை பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் நிகழ்த்தப்படவுள்ளது.

இவர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் பிரதித்தலைவரும், 2007 ஆம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவரும். 2030 பேண்தகு இலக்கு என்பதன் ஜனாதிபதி நிபுணர்கள் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுவருகிறார்.

மேலும் இம் மாநாட்டில் உரையாற்றுவதற்காக வெளிநாட்டு பிரபலமான இலங்கை புத்தி ஜீவிகள் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) மேஜர் ஜெனெரல் இந்துநில் ரணசிங்க, கற்கைநெறிகளுக்கான பிரதி உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த ஆரியரத்ன ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது.

ஒரு உலகத்தரம் வாய்ந்த அமைப்பான சர்வதேச ஆய்வு மாநாடானது வல்லுனர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் பெறுமதிமிக்க ஆய்வுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த ஒரு தளமாக காணப்படுகிறது.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அறிவார்ந்த இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் அவர்களது ஆய்வுகளை சமர்ப்பிக்கவும் கலந்துரையாடவும் மற்றும் அவர்களது ஆய்வுகளின் கண்டறிதல்களை சக மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடவும் முடியும். இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச ஆய்வு மாநாடாட்டின் 11 ஆவது பதிப்பிற்கான ஆய்வுக்கட்டுரைகளை ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்கள் விரிவான கருத்துக்களையோ அல்லது முழு ஆவணங்களையோ சமர்ப்பிக்கலாம்.

இம்மாதம் 15ஆம் திகதி இதற்கான முடிவுத்திகதி ஆகும். இவ்வருட ஆய்வு மாநாட்டில் பாதுகாப்பும் உத்திகளுக்குமான கற்கைகள் பொறியியல் அடிப்படை மற்றும் பிரயோக அறிவியல் கணனியியல் தகவல் தொழிநுட்பம் முகாமைத்துவம் சட்டம் மருத்துவம் சுற்றுச்சூழல் நிர்மாணம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அறிவியல் என்பன உள்ளடங்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 

எனவே இக் கல்வி தொடர்பாக தமது ஆய்வுகளை சமர்பிக்கும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒத்துழைப்புடன் இம் மாநாடு சிறப்பிக்கப்படும். இவ்வருடம் இடம்பெறும் இச்சர்வதேச மாநாட்டில் பல்வேறு புதிய வசதிகளாக ஸ்கைப் ஊடாக தமது முன்வைப்புக்களை மேற்கொள்ளவும் மற்றும் பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் நூலக வசதிகளை பயன்படுத்தவும் முடியும்.

மேலும் இம்மாநாட்டில் தெரிவு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சஞ்சிகையிலும் வெளியிடப்படும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.