15 சதவீதம் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்கள்!

ரயில்வே கட்டணங்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியிலிருந்து 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

 இதன்படி தற்போது குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபா கட்டணம் அதிகரிக் கப்படாவிட்டாலும் 10 ரூபாவில் பயணம் செய் யக்கூடியதாகவிருந்த 10 கிலோ மீட்டர் தூரம் 8 கிலோ மீட்டர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டணங்கள் தொடர்பாக  நியமிக்கப்பட்ட ஐந்து பேரடங்கிய குழு தெரிவித்துள்ளது.

 மேலும்,   கிலோ மீட்டர் 8 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டதால் ரயில் நிலையங்களுக்கிடையில் 10 ரூபாவாகவிருந்த கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்படுமென மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.