அவன்ட் கார்ட் நிறுவனத்திடம் கையூட்டல் பெற்ற 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து 300 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கையூட்டல் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 இந்தக் குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இலட்சக்கணக்கான ரூபா பணம் இவ்வாறு கையூட்டலாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி, தம்மிடம் கையூட்டல் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பற்றிய பட்டியல் ஒன்றை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இவ்வாறு கையூட்டல் பெற்றுக்கொண்டவர்களில் சிலர் பொலிஸ் திணைக்களத்தின் அதி உயர் பதவிகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 என்ன காரணத்திற்காக இவ்வாறு கையூட்டல் பெற்றுக்கொள்ளபப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
   
Powered by Blogger.