மஹிந்த ராஜபக்ஷவுடன் 16 பேர் கொண்ட குழுவினர் இன்று சந்திக்கவுள்ளனர்!

அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது .

 இதன்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

 அரசியல் ரீதியான முன்னோக்கிய பயணம், நாட்டின் நிலைமை மற்றும் கட்சியின் நிலைமை என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.

 முன்னதாக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர ஆகியோரை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.