‘மே 18’- தமிழ்த் தேசிய துக்­க­ தினம்!

முள்­ளி­வாய்க்­கால் இனப்­ப­டு­கொலை நினைவு நாளான மே 18ஆம் திக­தியை, தமிழ் இன அழிப்பு தின­மா­க­வும், தமிழ்த் தேசிய துக்க நாளா­க­வும் அறி­வித்து வடக்கு மாகாண சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.
வடக்கு மாகாண சபை­யின் 122ஆவது அமர்வு கைத­டி­யில் உள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று முற்­ப­கல் நடை­பெற்­றது.
மே 18 ஆம் திக­தியை இன­அ­ழிப்பு நாளாக அறி­விக்­க­வேண்­டும் என்று வடக்கு மாகாண சிறு­வர் மக­ளிர் விவ­கார அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் சபை­யில் முன்­மொ­ழிந்­தார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் முள்­ளி­வாய்க்­கா­லில் தமி­ழர்­கள் மீது இன அழிப்பு நடத்­தப்­பட்­டது. அத­னால் மே 18 ஆம் திக­தி­யில் வரு­டாந்­தம் நினை­வேந்­தல் இடம்­பெ­று­கி­றது.
அந்த நாளை இன­அ­ழிப்பு நாளாக அறி­விக்க வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தார். இதனை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஜெய­சே­க­ரம் வழி­மொ­ழிந்­தார்.
இதனை அடுத்து குறித்த தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தாக அவைத்­த­லை­வர் அறி­வித்­தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.