நீதிபதி இளஞ்செழியன்- திருகோணமலைக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மாவட்ட மேல்  நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற திருமதி சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வவுனியா மேல் நீதிமன்ற  நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.
Powered by Blogger.