வலி சுமந்த நினைவுகளுடன். மே -18..!

 
குற்றுயிராக பலிகள் தினமொன்று


சிதறிய உடல்கள் தமிழினமென்று
சிதைத்து எறிந்த பகையினமொன்று..!

குருதியிலே மூழ்கிய எம்மினமன்று


இறந்து வீழ்ந்த தாயென்று
அறியாமல் இருந்த சிசுவொன்று
தெரிந்த மார்பிலே பாலென்று
இரந்து குடித்ததே பசியென்று.!

புகைந்து எரிந்த இடமன்று
புதைந்த உயிர்கள் சிலவன்று
சிதைந்து அறுந்த உடலன்று
சிதை மூட்டுதே தினம்நின்று..!

மனிதம் மரணித்த போரன்று
மரண ஓலங்கள் மறப்பதென்று
கடந்த காலங்கள் பலவின்று
கடந்தாலும் மறக்காத ரணமின்று..!

நந்திக்கடல் சொல்லி அழுமின்று
நந்திக்கடலே நச்சு புகையென்று
ஓடிய குருதி வாடையின்று
பாடையிலே போனாலும் மறப்பதென்று..!

துடித்து வெடித்த தமிழினமன்று
சிதறி ஓடிய தினமின்று
குதறி எடுத்த பகையினமன்று
குற்றுயிராக வீழும் நாளென்று..!

-சி.ரேகா-
Powered by Blogger.