'நந்திக்கடல்' தமிழர் மீளெழுச்சியின் ஒட்டுமொத்த அடையாளம்!

இது ஒரு நிலத்தின் பெயரல்ல..தமிழர் மீளெழுச்சியின் ஒட்டுமொத்த
அடையாளம்.அடங்க மறுக்கும் ஒரு இனத்தின் குறியீட்டு பெயர். போராடும் இனங்களின் நவீன நம்பிக்கை சொல். ‘பிரபாகரனியத்தை’ உட்செரித்த ஒரு இனத்தின் உலகளாவிய போர்க்குரல்.
உலக பயங்கரவாத அரசுகள், அதை தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் வகுத்து வைத்திருந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்து உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான விடுதலைக்கோட்பாடு பிரசவிக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் தாய்ச் சமர்க்களம்.
பற்றைகளும், புற்களும், சேறும், சகதியும் நிறைந்த ஒரு நீர்ப்பரப்பு ஒரு வரலாற்று நாயகனை ‘உள்வாங்கி’ ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டை வெளித்தள்ளியது.
போராடும் இனங்களுக்கான படிப்பினையும் பாடமும் மட்டுமல்ல வழிகாட்டியுமாக உலக ஒழுங்குக்கு சவாலாக அச்சமாக எல்லாமுமாக அது அந்த மண்ணிலிருந்து வெளித்தள்ளப்பட்டது.
வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறது.
Powered by Blogger.