தேசிய கணித ஒலிம்­பி­யாட் போட்­டிக்கு வடக்கு –கிழக்கு மாண­வர்­கள் 23பேர் தெரிவு!

மூவின மாண­வர்­க­ளும் பங்கு பற்­றிய தேசிய கணித ஒலிம்­பி­யாட் போட்­டிக்கு 45
மாண­வர்­கள் தெரி­வா­கி­யி­ருக்­கின்ற நிலை­யில் வடக்கு –கிழக்கு மாண­வர்­கள் 23பேர் தெரி­வா­கி­யி­ருப்­பது ஒரு நல்ல செய்­தி­யா­கும். வடக்­கில் 11பேரும், கிழக்­கில் 12பேரும் தெரி­வா­கி­யி­ருக்­கின்­ற­னர்.

 இந்த 23பேரில் 21பேர் தமிழ் மாண­வர்­க­ளா­வர். இரண்டு பேர் முஸ்லிம் மாண­வர்­க­ளா­வர். அல்­லா­ம­லும் தேசிய மட்­டத்­தில் சாதனை புரிந்த மூன்று மாண­வர்­க­ளில் ஒரு­வர் புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி மாணவி இந்­தி­ரன் றதுஷா. அவர் 56 புள்­ளி­க­ளைப் பெற்று இரண்­டாம் இடத்­தில் முத்­திரை பதித்த மாண­வி­யாக மிளிர்­கின்­றார்.

 மேலும் திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோணேஸ்­வர இந்­துக் கல்­லூ­ரி­யில் மட்­டும் 6மாண­வர்­கள் தெரி­வா­கி­யி­ருப்­பது நல்ல தகவலே. பருத்­தித்­துறை, முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா, யாழ்ப்­பா­ணம், அள­வெட்டி, மட்­டக்­க­ளப்பு, கிண்­ணியா, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய இடங்­க­ளி­லி­ருந்து மாண­வர்­கள் தோற்­றி­யி­ருப்­ப­தும் வென்­றி­ருப்­ப­தும் ஓர் இமா­லய சாத­னையே.

தொடர்ந்து இவர்­க­ள­னை­வ­ரும், பன்னாட்டு ஒலிம்­பி­யாட் போட்­டி­யில் கலந்து கொள்­ளு­கின்ற வாய்ப்­பி­னைப் பெறு­கி­றார்­கள் என்­பது குறிப்­பி­ டத்­தக்­க­தா­கும்.

Powered by Blogger.