அமித் வீரசிங்க உட்பட 35 பேரின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களாக கருதப்படும் அமித் வீரசிங்க உட்பட 35 பேர் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 இந்த வழக்கு கடந்த 14 ஆம் திகதி தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது அவர்களை இன்று(28) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

 கண்டி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இனரீதியிலான வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கடந்த தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.