யாழில் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள்!

யாழ்ப்பாண மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
 எதிர்வரும் ஜீன் 5 ஆம் திகதி தேசிய மரம் நடுகை தினத்தை முன்னிட்டு  யாழ். நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன் போது விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை ஆணையாளர்  உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Powered by Blogger.