4500 கிலோ கிராம் மாட்டிறைச்சியுடன் இருவர் கைது!

அனுமதி பத்திரமின்றி 4 ஆயிரத்து 500 கிலோ கிராம் மாட்டிறைச்சியை பாரவூர்தியொன்றில் ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பல்லம  ஆடிகம பிரதேசத்தை சேர்ந்த இருவரே இன்று காலை ஆணமடுவ காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த பாரவூர்தியில் இருந்து கொலை செய்யப்பட்டிருந்த 17 மாடுகளின் தலைகளும், தோல் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 இந்த மாடுகள் எங்கு கொலை செய்யப்பட்டுள்ளது என இதுவரை அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் ஆணமடுவ காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
             
Powered by Blogger.