போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது!

நாவலபிட்டி பிரிவை சேர்ந்த தொடரூந்து நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று இரவு முதல் ஆரம்பித்த திடீர் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 தொடரூந்து பொது முகாமையாளருடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இன்று காலை 9.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தொடரூந்து  நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 வடகொட தொடரூந்து நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னிறுத்தி இந்த திடீர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 இதனால் ரம்புக்கனைக்கு அப்பால் மலையக தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.