இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு 45.6 பில்லியன் வருமானம்!

இலங்கைத் துறைமுக அதிகார சபை கடந்த வருடத்தில் மட்டும் 45.6 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது.

 2016ம் ஆண்டு வருமானத்துடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க அளவில் வருமான அதிகரிப்பை சுட்டிக்காட்டுகின்றது.

 அத்துடன் 2017ம் ஆண்டு செலவினங்கள் மற்றும் வரி செலுத்தல் என்பனவற்றின் பின்னரும் 13.3 பில்லியன் ரூபா நிகர லாபத்தை துறைமுக அதிகார சபை கடந்த வருடம் ஈட்டியுள்ளது.

 எனினும் கடந்த 2016ம் ஆண்டு இத்தொகை வெறும் 1.03 பில்லியனாகவே காணப்பட்டிருந்தது. பிராந்திய துறைமுகங்கள் என்ற வகையில் காலி மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களும் கணிசமான லாபத்தை ஈட்டியுள்ளன.

 கொழும்புத் துறைமுகம் கடந்த ஆண்டில் 16.2 வீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
Powered by Blogger.