63.5 சதவீதமானவர்கள் முறைசாரா தொழில் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்!

புதிய ஆய்வறிக்கைகளின் படி, இலங்கையில் தொழில்புரிவோரில் 63.5 சதவீதமானவர்கள், முறைசாரா தொழில் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச தொழிலாளர் ஒழுங்கமைப்பு மேற்கொண்டுள்ள முறைசாரா தொழில் குறித்து ஆய்வின் பிரகாரம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 இதன்படி முறைசார்ந்த தொழில் பிரிவில் 37.3 சதவீதமானவர்களே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதேநேரம் முறைசாரா தொழில்பிரிவில் உள்ளடக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில், 63.5 சதவீதமானவர்கள் ஆண்களாவர்.

 இதேவேளை விவசாயம் சாராத ஏனைய முறைசாரா தொழில்பிரிவுகளில் 49.2 சதவீதமான இலங்கையர்கள் பணியாற்றுகின்றமையும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.