வடக்கு, கிழக்­கில் 65 ஆயிரம் வீடு­கள் ரணில் உறுதி!

வடக்கு   கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

 யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

 வடக்கு- கிழக்­கில் வீடு தொடர்­பான பிரச்சினை பிர­தா­ன­மா­னது. அதைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக 25 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­டும். அதே­போன்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக 40 ஆயி­ரம் வீடு­கள் அமைக்­கப்­ப­டும்.

மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஊடா­க­வும் கல் வீடு­களே அமைக்­கப்­ப­ட­வுள்­ளது   என்­றார்.

Powered by Blogger.