குற்றங்களுடன் தொடர்புடைய 75 வீதமான சந்தேகநபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்!

இலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 95 வீதமான சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 75 வீதமான சந்தேகநபர்களை அடையாளம் காணவும் பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உலகில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகளவு முன்னணியில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.